தீய சக்தி திமுக உள்ள காங்கிரஸ் கூட்டணி வேண்டாம்
தமிழ்நாட்டிலும் திமுக மற்றும் காங்கிரஸ் குழப்ப அணியாக உள்ளது போன்று
புதுச்சேரியிலும் குழம்பிப்போன அணியாகவே உள்ளதென என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“புதுச்சேரியில் தவெக போட்டியிடுகிறது. நமது கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை
மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
மக்களுடன் மக்களாக இருப்பவர்களைத் தான் நமது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன்.
நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கூட்டணி 5, 6 முறை ஆட்சியில் இருந்தது. அந்த கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை
மட்டும் ஏமாற்றவில்லை, அவரது தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது.
தற்போது அந்தக் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
தீய சக்தி திமுக இருக்கிற காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம். பாஜக கூட்டணியும் வேண்டாம். தமிழகத்தில் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும்.
விசில் புரட்சியை ஏற்படுத்த விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.
தேர்தல் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது” என்றார்.





