இலங்கை செய்தி

” கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கட்டளைத் தளபதி”

இலங்கைக்குபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) இன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்றிருந்தார்.

கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு வருமாறு,

” அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு உறவானது பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது.

அது எமது இரு நாடுகளதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.

கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் அட்மிரல் ஸ்டீவ் கேலர் கொழும்பு துறைமுகத்தில் சந்தித்தார்.

இலங்கை தனது கடற்பகுதியினைப் பாதுகாத்து, ஒரு பாதுகாப்பான, வினைத்திறனான கப்பல்களுக்கிடையே சரக்குகளை மாற்றியேற்றும் கேந்திர நிலையத்தினை செயற்பாட்டில் வைத்திருக்கும் போதுதான் இலங்கையிலும் அமெரிக்காவிலும் வர்த்தகம் சீராக நகரும், வணிகங்கள் வளரும், வேலைவாய்ப்புகள் பேணப்படும்.

உலகின் மிக முக்கியமான கடல்வழித்தடங்களின் சந்தியொன்றில் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய விடயங்களில் எமது அமெரிக்க-இலங்கை பங்காண்மை கட்டமைக்கப்பட்டுள்ளது.” – என்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!