இலங்கை

கந்தளாயில் ரயிலில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் இடம்பெற்ற துயரமான ரயில் விபத்தில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருமணமாகாதவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (04) இரவு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன், தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மோதியுள்ளார். வென்ராசன்புரயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு தண்டவாளம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கந்தளாய் குற்றப் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!