உலகம் செய்தி

சீனாவின் முன்மொழிவு “நச்சு மாத்திரை” – தைவான் அரசு கொதிப்பு

தைவான் Taiwan எதிர்க்கட்சித் தலைவரின் Cheng Li-wun, பீஜிங் பயணத்தைத் தொடர்ந்து, தைவானுக்காக 10 புதிய சலுகைகளை சீனா முன்மொழிந்துள்ளது.

சுற்றுலாத் தளர்வுகள், ஊடகப் பரிமாற்றங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கான வசதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

“சுதந்திர தைவான் எதிர்ப்பு” உட்பட அரசியல் நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையிலேயே மேற்படி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த முன்மொழியை “நச்சு மாத்திரை” என தைவானின் ஆளுங்கட்சி விமர்சித்துள்ளது.

எனினும், எதிர்க்கட்சியான குவோமின்டாங் சீனாவின் திட்டத்தை வரவேற்றுள்ளது.

தைவானை சுயாதீன நாடாக சீனா ஏற்கவில்லை. அது தமது நாட்டின் பிராந்தியமாகவே பீஜிங் கருதி வருகின்றது.

எனினும், தைவானை அமெரிக்கா தனி நாடாக கருதுகின்றது. சீனாவுடனான இராஜதந்திர மோதலில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!