உலகம் செய்தி

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது சீனா?

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு சீனா தயாராகிவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆயுத பரிமாற்றத்தில் தாம் பங்கேற்கவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நட்பு நாடுகள் ஊடாக அவற்றை கையளிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.

இக்காலப்பகுதியை பயன்படுத்தி தனது ஆயுத இருப்பைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் முனையக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், மோதலில் ஈடுபடும் எந்தத் தரப்பிற்கும் தாம் ஆயுதங்களை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டு, மேற்படி செய்தியை சீனா அடியோடு நிராகரித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்படுவதையே தமது நாடு விரும்புவதாகவும், அதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டுவருகின்றது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி அடுத்த மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!