‘போர் நிறுத்தத்துக்குள் புகுந்த சீனா’ – நீடித்த அமைதி வேண்டுமென வலியுறுத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் இந்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்த வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் மோதல்கள் நீங்கி இயல்பு நிலை திரும்புவதை சீனா எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய போரை முற்றிலுமாக நிறுத்தி, நீடித்த அமைதியை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





