இளவரசர் ஹாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!
இளவரசர் ஹாரி தனது தாயார் டயானாவின் நினைவாகத் தான் இணைந்து நிறுவிய சென்டெபேல் (Sentebale) என்ற தொண்டு நிறுவனம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இளவரசர் ஹாரி மீது அந்தத் தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
அவர் ஒரு “பாதகமான ஊடகப் பிரச்சாரத்தை” திட்டமிட்டு நடத்தியதாகவும், அது அந்த நிறுவனத்தின் “செயல்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சென்டெபேலின் முன்னாள் அறங்காவலரான மார்க் டயரும் (Mark Dyer) இந்த சட்ட நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். மேற்படி இருவரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
சென்டெபேலின் அறங்காவலர் குழு, கூறப்படும் இந்தப் பிரச்சாரத்திலிருந்து நீதிமன்றத்தின் “பாதுகாப்பை” நாடுவதாகக் கூறியுள்ளதுடன், சட்டச் செலவுகள் வெளி நிதியுதவியால் ஈடுசெய்யப்படுவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.





