அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா!
வடக்கு அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்” HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலால் (HMS Prince of Wales) இது வழிநடத்தப்படும் என்றும் கூறினார்.
இது யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் பல தசாப்தங்களாக, அனைத்து நேட்டோ உறுப்பினர்களையும் பாதுகாக்க அதன் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் ஐரோப்பாவில் உள்ள ஒரே அணுசக்தி நாடாக ஐக்கிய இராச்சியம் உள்ளது எனக் கூறிய அவர், பிரான்ஸுடனான அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.





