இலங்கை

யாழ். வடமராட்சியில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் இன்று (31) காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல்போன அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!