”நான் தவறு செய்துவிட்டேன்” இரத்த பரிசோதனையில் வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நேற்று மதியம் கைதான ஸ்ரீகாந்த் இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறி எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி தயாளனிடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார். […]