ஷேக் ஹசீனா உட்பட 50 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த வங்கதேச நீதிமன்றம்

அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக வங்காளதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையம் (ACC) தாக்கல் செய்த மூன்று தனித்தனி குற்றப்பத்திரிகைகளை பரிசீலித்த பின்னர் டாக்கா பெருநகர மூத்த சிறப்பு நீதிபதி ஜாகிர் ஹொசைன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கைது உத்தரவுகளை நிறைவேற்றுவது குறித்த அறிக்கைகளை மறுபரிசீலனை செய்ய நீதிபதி ஹொசைன் ஏப்ரல் 27 ஆம் தேதியை நிர்ணயித்ததாக ஏசிசி உதவி இயக்குநர் அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)