விளையாட்டு

தென்னாபிரிக்கா மண்ணில் களமிறங்கும் ஆஸி.அணி!

தென்னாபிரிக்கா மண்ணில் களமிறங்கி விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.

இதற்கமைய ஆஸ்திரேலிய அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும்.

செப்டம்பர் 27 இரண்டாவது ஒருநாள் போட்டியும், 30 ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 9ம் திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய வீரர்களான டேவி வார்னர், ஸ்மித் மற்றும் கேமரன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை கடும் நடவடிக்கை எடுத்து ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடையும், பான்கிராப்டுக்கு ஒன்பது மாத தடையும் விதித்தது.

இந்நிலையில், அந்த சர்ச்சைக்குப் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

 

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!