உலகம் செய்தி

உக்கிர தாக்குதல்: ஈரானில் பலர் பலி!

ஈரானின் பர்திஸ் மற்றும் ஷாரியார் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் சேதமடைந்துள்ளன.

இடிபாடுகளுக்கு அடியிலிருந்து இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேற்குப் பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகவும் உக்கிரமான முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

ராணுவ இலக்குகளுக்கு அப்பால் பொது கட்டமைப்பு உள்ளிட்டவைமீதும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!