இலங்கை செய்தி

எம்.பிகளுக்கு இத்தனை சலுகைகளா? சம்பளை பட்டியலை வெளியிட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 2026 மார்ச் மாதத்திற்கான சம்பள பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதன்படி, மார்ச் மாதத்திற்கான அவரது மொத்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபாவாகும்.

இதிலிருந்து வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் என மொத்தம் 19,308.71 ரூபா கழிக்கப்பட்ட நிலையில், அவரது வங்கி கணக்கில் 395,861.22 ரூபா தேறிய சம்பளமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பள விபரங்களின்படி, மாதாந்த கொடுப்பனவாக 54,285 ரூபாவும், தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், எரிபொருள் கொடுப்பனவாக 179,707.93 ரூபாவும், அமர்வு கொடுப்பனவாக 15,000 ரூபாவும் உள்ளடங்கியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறான சம்பளங்களையே பெறுகின்ற போதிலும், அதன் விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை என எம்.பி அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன்னர் பொதுமக்கள் இது போன்ற உண்மைத் தன்மைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!