தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் – மகேஷ் சேனாரத்ன!
தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் என மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் பதவியேற்பு நிகழ்வு இன்று (21.03) இடம்பெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் யுகத்தை உருவாக்க விரும்புகிறோம். மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம், உருவாக்க முடியாவிட்டால் வரமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)