இலங்கை செய்தி

பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி,
விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, வர்த்தமானியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!