Amazon நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியருக்கு அதிர்ச்சி! விமானம் தரையிறங்கியதும் வந்த தகவல்
 
																																		பிரபல நிறுவனமான Amazon தமது பணியாளர்களைப் படிப்படியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
சுமார் 3,000 ஊழியர்களைப் கட்டம் கட்டமாகக் குறைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Amazon நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர் ஒருவர் விடுமுறைக்காக நாடு திரும்பிய நிலையில், வேலையில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக Amazon நிறுவனத்தின் அறிவிப்பைப் பெற்றுள்ளார்.
தீபாவளி விடுமுறைக்காக இந்தியா சென்றவருக்கு வேலை இல்லை என்பது பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட இந்தியர் சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாறியுள்ளார்.
அவரது வேலை நீக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் கவலை வெளியிட்டுள்ளதுடன், அவருக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டமையினால் இழப்பீட்டுத் தொகையை Amazon நிறுவனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
 
        



 
                         
                            
