தைவான் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து!
தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதிக்கும் இறுதி பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட ஆவணங்களில், 2025 முதல் 2029 வரை அமெரிக்க பொருட்களின் கொள்முதலை கணிசமாக அதிகரிக்க தைவான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொகுப்பில், $44.4 பில்லியன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய், $15.2 பில்லியன் சிவில் விமானங்கள் மற்றும் இயந்திரங்கள், $25.2 பில்லியன் பவர் கிரிட் உபகரணங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள், கடல் மற்றும் எஃகு தயாரிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் தைவானிய பொருட்கள் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியுடன் ஒத்துப்போகிறது.
எவ்வாறாயினும் தைவான் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்படத்தக்கது.




