நாடு முழுவதும் ஸ்பாக்களை ஒழுங்குபடுத்தப்பட நடவடிக்கை
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்பா மையங்களையும் (SPA) ஒழுங்குபடுத்துவதற்கும் இயக்குவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பொது நிர்வாக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் பொது நிர்வாக அமைச்சினால் இது குறித் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஸ்பா நிலையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவிடுதல், அந்த நிலையங்களிலிருந்து பதிவுக் கட்டணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிலோன் ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.
(Visited 6 times, 1 visits today)