இலங்கை செய்தி

மூன்று வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து!

கண்டி ​​Kandy மாவட்டம், கம்பளை Gampola பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல Nagolla பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!