ஆசியா

ஈரானில் போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 32 பேர் பலி!

ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் போதை பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென இந்த மையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி காலை 6 மணிக்கு முன் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
See also  ஈரான் உயர்மட்ட அணு விஞ்ஞானி கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு மரண தண்டனை
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content