ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் காரை திருட வந்த குடும்பல்

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீடு மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ பகுதியில் உள்ள இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டிற்கு நான்கு பேர் வந்த விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அவர்கள் கருப்பு உடை அணிந்து, கூர்மையான ஆயுதங்களுடன் வந்தனர்.

எவ்வாறாயினும், தாக்குதல் அபாயத்தை எதிர்கொண்ட இலங்கையர் உடனடியாக அவர்களுக்கு பதிலளித்தது சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.

இக்குழுவினர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, ​​இலங்கையர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் காரையும் சந்தேக நபர்களையும் படம் எடுக்க விரைந்தார்.

தாக்குதலுக்கு வந்தவர்களின் முக்கிய நோக்கம் தனது காரை கடத்துவதே என சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குழுவைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!