UKவில் தற்செயலாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி கைது!
பிரித்தானியாவில் சிறைச்சாலையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரிய புகலிடக் கோரிக்கையாளரான கடூர்-செரிஃப் (Kaddour-Cherif) அக்டோபர் 29 அன்று வாண்ட்ஸ்வொர்த் (Wandsworth ) சிறைசாலையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார்.
காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், லண்டனின் இஸ்லிங்டனில் (Islington) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களில் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே வாரத்தில் சிறையில் இருந்து கடூர்-செரிஃப் (Kaddour-Cherif) மற்றும் வில்லியம் ஸ்மித் (William Smith) ஆகியோர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் வில்லியம் ஸ்மித் தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்தார். செரிஃப் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





