தம்பதிக்கிடையே நடந்த மோதல் – ஐரோப்பிய தலைவரை கேலி செய்த ட்ரம்ப்!
அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை கேலி செய்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்ரோன் அவரது துனைவியாருடன் வியட்நாம் பயணம் செய்தபோது தம்பதிக்குள் எழுந்த மோதல் போக்கையே ட்ரம்ப் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று எதிர்வினையாற்றியுள்ளார். இழிவான கருத்துக்கள் “நாகரிகமானவையாகவோ அல்லது தரமானவையாகவோ இல்லை” என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ட்ரம்பின் இந்த செயலுக்கு தீவிர இடதுசாரியான ‘பிரான்ஸ் அன்பௌட்’ கட்சியின் தலைவர் மானுவல் பொம்பார்ட் ( Manuel Bompard) உட்பட, பிரெஞ்சு அதிபரின் அரசியல் எதிரிகள் கூட மக்ரோனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் நடந்த ஈஸ்டர் மதிய விருந்தின்போது பேசிய ட்ரம்ப், மக்ரோனை அவரது மனைவி மோசமாக நடத்துவதாகவும், மக்ரோன் அவரது மனைவியின் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




