இலங்கை

சாலையோரம் காத்திருந்த பெண்மீது பேருந்து மோதி விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் யட்டியந்தோட்டை, தங்கொலவத்த பகுதியில் இன்று (20) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் மற்றும் மகன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து யட்டியந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!