ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் – தொடரும் மீட்புப் பணிகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் கடுமையான மழையை அடுத்து திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
திடீர் வெள்ளத்தால் இதுவரை 50 அவசர அழைப்புகளை அதிகாரிகள் பெற்றனர்.
குடியிருப்பாளர்களில் சிலர் தங்களது வீடுகளில் பெயர்ந்த கூரைகளை மாற்றிக்கொடுக்குமாறு உதவி கேட்டுள்ளனர்.
இதற்கிடையே வீதியில் காருக்குள் சிக்கிக்கொண்ட இருவரை அதிகாரிகள் வெளியே இழுத்துக் காப்பற்றியுள்ளனர்.
சிட்னிக்கு வெளியே உள்ளவர்களும் உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.
சிட்னியில் நேற்று இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியமுண்டு என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வகம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
இந்த வாரம் முழுவதும் அந்த நகரில் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.