கெஹலியவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் பரிந்துரை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அவர் தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)