இலங்கை : புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பல சாதனங்கள் மீட்பு!

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் மண்ணில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
புஸ்ஸ சிறைச்சாலையின் பழைய பிரிவிலுள்ள ஏ மற்றும் டி வார்டுகளில் விசேட நேற்று (10.02) அதிரடிப்படையினர் மற்றும் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் அவசர சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு வார்டுகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேசி, 02 சிறிய அளவிலான கையடக்கத் தொலைபேசி, 04 சிம் அட்டைகள், 01 மெமரி சிப் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 02 ஃபோன் சார்ஜர்கள், 02 டேட்டா கேபிள்கள் மற்றும் 01 ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஆகியவை வெளிப்புற கவர்கள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்டன.
(Visited 12 times, 1 visits today)