பல்வேறு காரணங்களால் இடம்பெயர்பவர்களுக்காக நிதியுதவி கோரும் ஐ.நா!
காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் இடம்பெயரும் மக்களுக்கான சுமூகமான பாதைகளை உறுதிப்படுத்த UN அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக $7.9 பில்லியனை ஐ.நா இடம்பெயர்வு நிறுவனம் கோரியுள்ளது.
இதற்கான நிதி தனிநபர் மற்றும் தனியார் துறை நன்கொடையாளர்களிடமிருந்து வரும் என்று நம்புவதாகக் OIM வின் புதிய தலைவர் Amy Pope, தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 140 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒழுங்கற்ற மற்றும் கட்டாய இடம்பெயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது மற்றும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பெருகிய முறையில் சிக்கலானவை” என்று போப் கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)