அட்டகாசமான சிங்கம், ஓநாய் கதை… – தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ட்ரெய்லர் எப்படி?

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
துப்பாக்கி, தோட்டா, தெறிக்கும் ரத்தம், வெடிக்கும் குண்டு, கருணையில்லா கொலைகள் எல்லாமே அப்படியே அருண் மாதேஸ்வரன் ஸ்டைல்.
ஆனால் அவரின் முந்தைய படங்களில் இல்லாத வகையில் ஆதிக்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ஜி.வி.பிரகாஷின் சவுண்ட் மிக்சிங் அட்டகாசம்.
‘நீ யாரு… உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ என தனுஷ் பேசும் வசனமும், கடைசியில் வரும் சிங்கம் – ஓநாய் கதை கவனம் பெறுகிறது.
(Visited 10 times, 1 visits today)