எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கும் காசா
காஸாவிற்கு வரும்படி அமெரிக்கச் செல்வந்தர் எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
காஸா மக்களுக்கு எதிராக எந்த அளவுக்கு அழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காண மஸ்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்டான் கூறினார்.
நேற்று முன்தினம் (ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கிய இடத்திற்கு மஸ்க் சென்று பார்வையிட்டார். வெறுப்புணர்வு பரவுவதைத் தடுக்கத் தேவையான அனைத்தையும் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தியது.
நேற்று இருதரப்புக்கும் இடையிலான சண்டைநிறுத்தம் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)