விளையாட்டு

டொனால்ட் டிரம்புடன் கோல்ப் விளையாடிய மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான எம்.எஸ். டோனி அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்ததன் பேரில் எம்.எஸ். டோனி கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இருவரும் கோல்ஃப் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரவ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்று போட்டியை எம்.எஸ். டோனி நேரில் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ். டோனி மற்றும் டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எம்.எஸ். டோனியின் நண்பர் ஹிதேஷ் சங்வி பகிர்ந்து இருக்கிறார்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ