ஜி -20 மாநாட்டை புறக்கணித்த சீன அதிபர் : பைடன் வெளியிட்ட கருத்து!
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்ததையடுத்து, தாம் ஏமாற்றமடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
டெலவேரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “I AM A DISSAPOINTED… BUT I AM GOING TO GET TO SEE HIM” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வரும் 7ம் திகதி முதல் 10ம் திகதி வரை இந்தியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்று அதன் பிறகு வியட்நாம் செல்லவிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தால், சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையே சந்திப்பு நடைபெறும் என பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் சீன அதிபர் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார்.