தலிபான்களின் தடையை மீறி கல்வி கற்க வெளிநாடு சென்ற பெண்கள்!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் அடங்கிய குழுவொன்று கல்வி கற்க வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி உயர்கல்வி பெறும் நோக்கில் சுமார் 450 யுவதிகள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்கள் தலிபான் ஆட்சியின் நிபந்தனைகளுக்கு மாறாக செயற்படுவதால், இளம் பெண்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பும் அல்லது பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)