இலங்கை செய்தி

வெல்லவாய வீதியில் அரச பேருந்துடன் மோதிய கெப் வண்டி

மொனராகலை – வெல்லவாய வீதியின் மதுருகெட்டிய பிரதேசத்தில் அரச பேருந்தும் தனியார் கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கெப் வண்டியின் சாரதி காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வெல்லவாயவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த கெப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

கெப் சாரதியின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!