ரஷ்யாவில் அதிர்ச்சி – கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த நபர்
ரஷ்யாவில் கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த Mikhail Raduga என்ற துளையிடும் கருவியைக் (drill) கொண்டு சொந்தமாகத் தமது மூளையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்.
அது அவரது உயிருக்கே ஆபத்தாகிய நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனவுகளைக் கட்டுப்படுத்த நுண் சில்லு ஒன்றை மூளையில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக ராடுகா தெரிவித்தார்.
40 வயதான Raduga அது குறித்த விபரங்களைத் தமது Twitter பக்கத்தில் வெளியிட்டார். நரம்பியல் நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளைப் பார்த்து அவற்றிலிருந்து சிகிச்சை செய்யக் கற்றுக்கொண்டதாக Raduga தெரிவித்துள்ளார்.
4 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் அவர் சுமார் 1 லிட்டர் ரத்தத்தை இழந்துள்ளார். சிகிச்சை முடிவுகள் எதிர்காலத்தில் கனவுகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு பேருதவியாக இருக்கும் என Raduga குறிப்பிட்டுள்ளார்.