இலங்கை

மன்னாரில் நீதிமன்ற சான்று பொருளை திருடி விற்க முயன்ற உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் புதன் கிழமை(19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்றைய தினம் காலை விற்பனைக்காக கொண்டு சொன்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாகவே மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நீதிமன்ற கட்டுகாவலில் உள்ள சான்று பொருட்களான போதை பொருட்கள் திருடி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதே நேரம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்படும் போதை பொருட்கள் இவ்வாறு பல வருடங்களாக திருடி விற்பனை செய்யப்படுவதாகவும் சான்று பொருளாக காணப்படும் ஐஸ் போதை பொருளும் திருடி விற்பனை செய்து அதற்கு பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்