பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகைகள் கொள்ளை
பெண்ணை வன்புணர்வு செய்து தங்கப் பொருட்களை திருடிய நபர்களை கண்டுபிடிக்க கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கம்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த 44 வயதுடைய பெண்ணொருவர், இனந்தெரியாத இருவரினால் அவரது வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதங்களால் பெண்ணை பயமுறுத்தி வீட்டில் இருந்த 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





