அமித்ஷாவை சந்தித்த ஜி.வி.பிரகாஷ் : ஒருவேளை அரசியலில் பிரவேசிக்க போகிறாரா?
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் விதமாக அந்த கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்திருந்தார்.
அவரின் வருகையின்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான பிரபலங்கள் அவரின் அழைப்பை நிராகரித்திருந்தனர்.
இருப்பினம் இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் மாத்திரம் அவரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவதுஇ அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீ.வி பிரகாஷ்இ இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் நிறை மற்றும் குறைகளை எடுத்து சொல்லி இருக்கிறார்.
மேலும் தமிழகம் மற்றும் தமிழ் மொழி மீது எந்த ஒரு அடக்கு முறையும் எடுக்க வேண்டாம் எனவும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.
சில விமானங்களில் செல்லும் பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு கொடுக்கப்படுவதே இல்லை அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் பள்ளி மாணவர்களிடையே புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர முயற்சி செய்யும் நீங்கள் முதலில் இங்கிருக்கும் பள்ளிகளின் கட்டமைப்பை பார்க்க வேண்டும் எனவும் இங்குள்ள பள்ளிகளில் முதலில் கட்டமைப்பு சரி இல்லை எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார்.