கிண்ணஸ் உலக சாதனை படைத்த கனேடியர்! அப்படி என்ன செய்தார்?
கைகளைப் பயன்படுத்தாமல் அதிக தூரம் மிதிவண்டியை ஓட்டியதற்காக கனடிய பிரஜை ஒருவர் கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கல்கரியைச் சேர்ந்த ரொபர்ட் முரே என்ற நபரே இவ்வாறு கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
ரொபர்ட் முரே 130.28 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிலைநாட்டுவதற்காக சில ஆண்டுகள் திட்டமிட்டதாக முரே தெரிவித்துள்ளார்.
இந்த கிண்ணஸ் சாதனை முயற்சியின் ஊடாக கல்கரி அல்சீமர் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கைகளின் உதவியின்றி நீண்ட தூரம் சைக்கிளோடிய கிண்ணஸ் சாதனை 122 கிலோ மீற்றராக காணப்பட்டது.
இந்த நிலையில் முரே 130.28 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.






