ஐரோப்பா

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிரித்தானியர்கள் பலி!

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரிட்டிஷ் பயணிகள் மூவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் தீப்பிடித்த டைவிங் படகில் இருந்த காணாமல் போயிருந்த மூன்று பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Scuba Travel இன் செய்தித் தொடர்பாளர் “டூர் ஆபரேட்டராக, எங்கள் மிகவும் மதிப்புமிக்க மூன்று  பயணிகள் தீவிபத்தில் உயிரிழந்ததை கனத்த இதயத்துடன்,  தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சோகமான நேரத்தில் எங்கள் உண்மையான மற்றும் இதயப்பூர்வமான இரங்கல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

செங்கடலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரீஃப் பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த மூவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!