இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது.

முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தொழில் கல்வித் தகைமைக்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என இதன்போது சோனியா டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஆலோசகர் சுமித்ரா சதாசிவம், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். இளங்கீரன் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!