இலங்கை செய்தி

நிலக்கரி பிரச்சினைகள் கட்டணப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை – PUCSL

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகளை நீக்குவதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!