இலங்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி – 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக
கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, விசைப்படகொன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இவர்கள் யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டதாக 20 படகுகளுடன் 141 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!