உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சு ஆரம்பம்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில்  ஆரம்பமாகியுள்ளது.

ஈரான் அரச ஊடகம் மற்றும் சர்வதேச ஊடங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடனேயே மேற்படி பேச்சு ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ம் திகதி இருவாரகால போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இந்நிலையிலேயே நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்குரிய அமைதிப் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!