ட்ரம்பின் முடிவு வெட்கக்கேடான அத்தியாயம்: ஓபாமாவின் ஆலோசகர் சாட்டையடி!
மத்திய கிழக்கு தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Barack Obamaவின் ஆலோசகர் பென் ரோட்ஸ் Ben Rhodes கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான்மீது ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் முடிவு, அமெரிக்க வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயம் எனவும் அவர் சாடியுள்ளார்.
இப்படியான தவறான முடிவுகளால் உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், இந்த மோதலால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், இது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சாதகமாக அமையும் எனவும் ஓபாமாவின் ஆலோசகர் Ben Rhodes எச்சரித்துள்ளார்.





