அமெரிக்கா, ஈரானுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிப்பு!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார்.
இந்த அமைதி உடன்படிக்கையானது லெபனான் மற்றும் பிற பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளும் காட்டிய முதிர்ச்சியான அணுகுமுறையைப் பாராட்டியுள்ள அவர், இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டுத் தூதுக்குழுக்களையும் இஸ்லாமாபாத்திற்கு அழைத்துள்ளார்.
வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிநடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, இப்பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





