உலகம் செய்தி

அமெரிக்க படைகள் வெளியேற்றம் உட்பட 10 அம்ச திட்டத்தை முன்வைத்தது ஈரான்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 10 அம்சத் திட்டத்தை தனது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் ஈரான் முன்வைத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 1o ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பு நேரடி பேச்சுவார்த்த இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுமையாக வெளியேற்ற ஈரான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் ஈரான் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கி, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் இதில் முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்துகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!