ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை குறித்து எச்சரிக்கை!

பிரித்தானிய மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை ஏற்படுவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் “மிக அதிக” அளவிலான மகரந்தம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

இந்நிலையானது இங்கிலாந்து முதல் வேல்ஸ் வரை பாதிக்கும் எனவும், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திலும் அதிக அளவிலான மகரந்தம் காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 மில்லியன் பிரிட்டானியர்கள் மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மகரந்தத்தால் தூண்டப்படும் ஒரு ஒவ்வாமையாகும். இதனால் தும்மல், மூக்கு ஒழுகுதல், மற்றும் கண்கள், தொண்டை, வாய் அல்லது காதுகளில் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

ஐக்கிய ராச்சியத்தின் சில பகுதிகளில் 19°C வரையிலும், லண்டனில் 24°C வரையிலும் வெப்பநிலை உயரக்கூடும் என்பதால், அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையானது மகரந்தத்தின் அளவு உயர்வதற்குக் காரணமாக அமைவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!