07 ஆண்டுகளுக்கு பின் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா!
மத்திய கிழக்கு மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளன.
இந்திய பெட்ரோலிய அமைச்சகம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2019 முதல் ஈரானுடனான எரிபொருள் கொள்வனவை இந்தியா நிறுத்தியிருந்தது.
இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளது.
விநியோகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, அமெரிக்கா கடந்த மாதம் ஈரானிய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





